உலகில் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சேலம் முத்துமாலை முருகன் கோவிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டது.
ஆத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி திருவாரூரில் இருந்து ஸ்தபதி தியாகராஜனை அழைத்து வந்து ரூ.3 கோடி செலவில் உலகின் மிக உயரமான முருகன் சிலையை அமைக்க முடிவு செய்தார்.
முத்துநடராஜன் கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன்கள் சிலை கட்டும் பணியில் முன்னிலை வகித்தனர். இந்நிலையில், இன்று காலை, 10.30 மணிக்கு, 146 அடி உயரமுள்ள முத்துமாலை முருகன் சுவாமி, பெரிய கணபதி ஆறுபடை முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
உயரமான முருகன் சிலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
இந்நிலையில், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை உள்ளது.
இதன் உயரம் 140 அடி. மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட சேலத்தில் உள்ள முருகன் சிலை 6 அடி உயரம் கொண்டது.