யாழில் 8 வருடங்களுக்கு முன் கூறிய சவால்களை வெற்றி கொண்ட ஏழை மாணவன்
யாழின் வழக்கப்படி, மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற பரமேஸ்வரன் சஞ்சய் அன்று அவர் கூறியதை போலவே உயர்தரத்தில் 3A எடுத்து மருத்துவத்துவறையில் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
எட்டு வருடங்கள் கழித்து, கடந்த உயர்தரப் பரீட்சையில் அளவெட்டி அருணோதயாவில் தோற்றிய சஞ்சய், யாழின் முன்னணி தனியார் கல்வி நிலையங்களினையும் பெருமளவில் நாடாமல் பாடசாலையிலும், தன் ஊரில் இருக்கும் சிறிய டியுஷன்களில் அதிகமாய் படித்து, உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் உயர்சித்தி பெற்று, district 16, island 126 எடுத்து, மருத்துவத்திற்கு தெரிவாகியிருக்கிறான்.
சஞ்சய் எந்தவொரு தனியார் கோச்சிங் நிலையங்களுக்கும் செல்லாது வெறுமனே பாடசாலை படிப்புடன் மட்டுமே இந்த முதல் நிலை சித்தியைப் பெற்றிருந்தார்.
யாழின் வழக்கப்படி, மாவட்டத்தின் முதல் பெறுபேறு, யாழ் நகருக்கு வா தம்பி, வந்து யாழ் இந்துவில் சேரு நல்லா வரலாம் ஆசைப்பட்ட மருத்துவம் படிக்கலாம் என்று ஏகப்பட்ட வரவேற்புகளும் அழுத்தங்களும் கிடைத்தபோதும்,
நான் இங்கே இந்தப் பாடசாலையிலேயே படிக்கிறேன். படித்து உயர்தரத்தில் நல்ல சித்தி பெற்று மருத்துவராகி சேவை புரிவேன் என்று ஐந்தாம் ஆண்டில் உறுதிபூண்டான் அந்தச் சிறுவன் இன்று வெற்றியையும் கண்டுள்ளான்.
இம்முறை நகரத்தை தாண்டிய தொலை தூர கிராமப்புற- சிறிய - வசதி - வளங்கள் குறைந்த பாடசாலைகள் எல்லாம் பெருமளவில் நல்ல ரிசல்ட் எடுத்திருப்பது மகிழ்ச்சியான விடயம்.