இன்று நாட்டையே கழுவி உற்றும் நிலை உருவாகியுள்ளது! சஜித்
எதிர்க்கட்சியை அரசாங்கம், கழுவி ஊற்றினாலும், இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (28-08-2022) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சர்வகட்சி அரசு என்பது புதிய புரளியாகும். சர்வகட்சி அரசு என்று கூறும் அரசு ஏன் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்கின்றது?
தற்போதைய தேவை பதவிகளைப் பகிர்ந்து கொள்வதல்ல. நாங்கள் ஒருபோதும் திருடர்களுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்.
ஆனால், அரசு நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும்போது அதற்கு ஆதரவளிப்போம்.
தேங்காய் எண்ணெய், சீனி, பூண்டு மோசடிகள் மட்டுமன்றி கழிவுப்பொருள் கப்பலுக்குப் பணம் கொடுத்த மோசடிகளையும் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும்” – என்றார்.