வேண்டுமென்றே தந்தையின் வாகனத்தை மோதிய மகன்!
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாகனத்தால் மோதிக் கொண்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மோதல்
வர்த்தகரான தந்தை தனது வாகனத்தில் நேற்றுக் காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் தனது மீன்பிடிப் படகை பரிசோதிப்பதற்காக வாகனத்தில் சென்றுள்ளார்.
இதன்போது பேருவளையிலிருந்து வந்த மகன் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் எதிரில் தான் வந்த வாகனத்தினால் தந்தையின் வாகனத்தை மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இருவரது வாகனங்களும் பேருவளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.