இலங்கையின் நிலை மிகவும் கவலைக்கிடம்! புத்துயிர் பெறும் கொரோனா
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது .
இதற்கமைய, பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், திவுலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், அனுராதபுரம் 64 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பரகஸ்தொட பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,146 பேருக்கு கொரோனா தொற்ருகுள்ளாகியுள்ளனர் . மேலும் 530 பேர் இன்று பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.