தமிழர் பிரதேசத்தில் சிங்களவர்கள் அடாவடி ; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் சிங்களவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்களவர்கள் அடாவடி
குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் சிங்களவர்கள் திருடமுற்பட்டபோதே அவர்களால் தான் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவரும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளரே சிங்களவர்களின் தாக்குதக்குள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று அவரை பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
அதேவேளை கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்களின் கால்நடைகளை வெலிஓயா பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் தொடர்ச்சியாக திருடிவருவதாக அப்பகுதி தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது திருட்டை தடுக்க செல்லும் தமிழர்களை சிங்களவர்கள் தாக்குகின்ற சம்பவங்களும் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந் நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலிரிடம் கொக்குத்தொடுவாய் மக்கள் முறையிட்டுள்ளனர். மேலும் இப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டும் என்பதே கொக்குத் தொடுவாய் தமிழ்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.