இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு காத்திருந்த க்ஷாக்!
இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் ஒருவரை இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அக்மீமன பிரதேச சபையின் வருமான ஆய்வாளராக பணியாற்றிவந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. காலி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25,000 ரூபா இலஞ்சம்
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இயங்கிவரும் முறைப்பாட்டாளருக்கு சொந்தமான உணவகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காகவே 25,000 ரூபாவை குறித்த அதிகாரி இலஞ்சமாக கோரியுள்ளார்.
அதன்படி, முறைப்பாட்டாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, நேற்று (30) சம்பந்தப்பட்ட அதிகாரியை முறைப்பாட்டாளரின் உணவகத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர். கைதான சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.