விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி; சென்னையில் ஒருவர் கைது!
விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டதாக சென்னையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் (NIA) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம்
அத்துடன் கைதானவர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த சந்தேக நபருக்கு சொந்தமான பல இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.
சோதனை நடவடிக்கையின்போது பெருந்தொகை பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் சில ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மோசடி தொடர்பான விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்த நிலையில், இதுவரை 14 சந்தேக நபர்களை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு கைதுசெய்துள்ளது.
மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில், தமிழகம் முழுவதும் 21 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட சோதனையில் 13 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.