சாலமன் தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம்
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது.
பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.