யாழ் பாடசாலை ஒன்றின் அதிபரின் மூர்க்க குணத்தால் துடிதுடித்த சிறுமி!
யாழ் தீவக பாடசாலை ஒன்றில் அதிபரினால் மூர்க்கத்தனாம தாக்கப்பட்ட மாணவி, வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் வீடு திரும்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் தீவக வலய பாடசாலையான மண்கும்பான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 வரை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
அதிபரின் காட்டுமிராண்டித்தனம்
தரம் 5,4 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் புலமைப்பரிசில் பரீட்சைக்காக மேலதிக வகுப்பு அதிபரால் நடாத்தப்படுகின்றது.
கடந்த 12.07.2023 அன்று புதன் கிழமை தரம் 4 மாணவர்கள் கணித பாடத்தில் பிழையாக செய்ததால் அனைவருக்கும் எஸ்லோன் பைப்பால், பைப் உடையும் வரை அதிபர் முதுகில் அடித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்கள் அழுதும் சத்தம் கேட்டு அயலில் வேலைசெய்து கொண்டு இருந்த 2 பேர் போய் பார்த்த போது இங்கு ஒருத்தரும் வர வேண்டாம் என்று ஏசி அவர்களை அதிபர் துரத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாது மாணவியின் முதுகில் தழும்பு ஏற்படும் அளவுக்கு அதிபர் அடித்துள்ள நிலையில் சம்பவம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
ஒரு மாணவிக்கு மட்டும் 20 க்கு மேற்பட்ட அடி
ஈவிரக்கமின்றிய அதிபர் தாக்கியதில் ஒரு மாணவிக்கு மட்டும் 20 க்கு மேற்பட்ட அடி விழுந்துள்ளது. இதனால் இவர் யாழ்போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று வீடு திரும்பிய உள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தமது உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாக வேலணை பிரதேச செயலலர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அதிபரினால் சின்னம் சிறு மாணவி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறான காட்டுமிராண்டி அதிபர்களினால் மாணவர்களுக்கு கல்விமீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள் அதிபரின் செயலை கடுமையாக கண்டித்துள்ளனர்.