யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபருக்கு நேர்ந்த நிலை
யாழில் உள்ள பாடசாலை மாணவரை அதிபர் ஒருவர் தாக்கியதில் அவரது செவிப்பறை பாதிக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
யாழ்.காரைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபர் அடித்ததில் க.பொ.த சாதாரண தர மாணவனின் ஒருபக்க காதில் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காரைநகர் இந்தக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை அழைத்த அதிபர் காட்சட்டை பொக்கற்றுக்குள் கை வைக்குமாறு கூறிவிட்டு 7 தடவை காதை பொத்தி அறைந்ததாக கூறப்படுகின்றது.
அதனை தொடர்ந்து மாணவனுக்கு காது பகுதியில் அதிகளவில் வலி ஏற்பட்டதால் குறித்த மாணவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவனது செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அதிபர் மீது
குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக.