அரச ஊழியர்களுக்கு பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அல்லது கொடுப்பனவு வழங்க கொள்கை மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்போது தேர்தல் சட்டங்களுக்கு அமையவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.