திடீரென அதிகரித்த உப்பின் விலை!
இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை உயர்வு காரணமாக, லங்கா உப்பு நிறுவனம் உப்பு விலையில் தற்காலிக அதிகரிப்பை அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த விலை அதிகரிப்பு தற்காலிகமானது என நிறுவனம் உறுதியளித்தது.
விலை அதிகரிப்பு
400 கிராம் தூள் உப்புப் பொதியின் விலை 20 ரூபாய் அதிகரித்து 100 ரூபாயிலிருந்து, 120 ரூபாயாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஒரு கிலோ கல் உப்புப் பொதியின் விலை 60 ரூபாய் அதிகரித்து 120 ரூபாயிலிருந்து, 180 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இலங்கையின் வருடாந்திர உப்பு தேவை சுமார் 20,000 மெட்ரிக் டன் ஆகும், ஆனால் 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்திக் குறைவடைந்திருந்தது. பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, இந்தியாவிலிருந்து 12,000 மெட்ரிக் டன் உப்பை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
இருந்தபோதிலும், உப்பு இறக்குமதி நீண்ட கால தீர்வு அல்ல என்று வர்த்தகக் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் ஹம்பாந்தோட்டை உப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செயற்பாடுகள் மீண்டும் தொடங்கும் போது உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அறுவடை கிடைத்தவுடன் விலைகள் குறைக்கப்படும் என்று லங்கா உப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.