வார இறுதியில் க்ஷாக் கொடுத்த தங்கம் விலை!
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தங்கம் விலையானது இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 5,521 ஆகவும், சவரனுக்கு ரூ. 188 ஒரு சவரன் ரூ.44,168 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,523ஆகவும், சவரனுக்கு ரூ. 72 குறைந்து ஒரு சவரன் ரூ.36,184 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.