சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியதால், பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .
இந்நிலையில் நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,538 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,304-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதோடு 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,904 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,232-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,529 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,232-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,895 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை வெள்ளி விலை ரூ. 200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 65.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 65,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.