மண் மீட்புக்காய் கணவரை இழந்த பெண்ணின் அவலநிலை!
தாய் மண்னுக்காய் கணவர் வீரமரணம் அடைந்த நிலையில் முன்னாள் போராளியான மனைவி சமூகத்தோடு தனித்து போராடும் அவல நிலை எம்மண்ணின் சாபமா அல்லது வரமா என தெரியவைல்லை.
மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் முன்னாள் பெண் போராளியின் கண்ணீர் கதையை சுமந்து வருகின்றது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி.
எம்மினத்தின் அவல நிலை
போரில் கணவரை பறிகொடுத்த நிலையில், சமூகத்தின் தவறான பார்வைகளும் சுட்டெரிக்கும் பேச்சுக்களும் கடந்து தன் பிள்ளைகளோடு வாழும் அபலைப்பெண்களின் நிலை கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.
வறுமையின் பிடியால் கல்வியை நிறுத்தி வேலைக்கு செல்லும் குழந்தைகளும் எம்மினத்தின் அவல நிலையை என்னவென்றுசொல்வது. இந்த சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக தான் பட்ட கஸ்ரங்களையும் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டுளார் அந்த சகோதரி.