மட்டக்களப்பின் பிரபல உணவகம் திடீர் முடிவு
நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சிற்றுண்டிச்சாலைகள் நடத்துபவர்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
தமது வாழ்வாதாரத்துக்கு அதனையே நம்பியுள்ள பலர் இன்று தமது குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டமுடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக நாடளாவிய ரீதியில் 80 வீதமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில் கேஸ் வாங்கி கடை திறந்தாலும் முன்னர் போன்று பிசினஸ் இல்லை. அனைத்திற்கும் விலை என்பதனால் ரிச்சான வாடிக்கையாளர் மட்டுமே வருவர்கள் என சிறுட்டிச்சாலை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இரவு 9.00 க்கு மூடப்படும் கடை தற்போது 10.30 தாண்டி படுவதாகவும் கூறப்படுகின்றது. பெரியளவில் செய்பவர்களுக்கே கஸ்டம் எனும் போது சாதாரணமாக ஹோட்டல் தொழிலை முன்னெடுப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை மட்டக்களப்பில் பிரபலமான ஹாஜியார் உணவகத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அறிவிப்பு பலகை சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.