கோட்டாபயவை இடைநடுவில் தவிக்கவிட்ட விமானம்!
மாலைதீவு வழியாக சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம், ஜூலை 14 அன்று மாலே விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைத்துச் செல்ல மறுத்து, நடுவானில் இந்தியாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் மாலைதீவு செல்வதற்காக புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், அவரின் மனைவியையும் அழைத்து வர விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், எனினும் விமானிகள் அதனை மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவில் இருந்து முன்னாள் ஜனாதிபதியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மூன்று விமானங்கள் தயார் நிலையில் இருந்த போதிலும், பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் காரணமாக கோட்டாபயவை அழைத்துச் செல்ல விமானிகள் மறுத்ததாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.