200 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கிய நபர்!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு கிடைத்த 200 மில்லியன் யூரோக்களின் பெரும்பகுதியை நன்கொடையாக வழங்கிய சம்பவம் பொது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரெஞ்சு பிரஜை ஒருவர் EuroMillions அதிஷ்ட்டத்தில் 200 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார். இந்நிலையில், அவர் வென்ற அந்த பணத்தில் கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவர் இந்த பெருந்தொகை பணத்தை வென்றதும், அவரை பல நிறுவனங்கள் அணுகி பணத்தை தங்கள் நிறுவனங்களில் முதலிடும்படி கோரியுள்ளனர்.
எனினும் அவர் தமக்கு அதில் எல்லாம் ஈடுபாடு இல்லை என தெரிவித்து, ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாக தெரிவித்து பணத்தை நன்கொடையளித்ததாக தெரிவித்தார்.
அதேவேளை, அவர் தனது சொந்த தேவைக்காக தனது நீண்ட நாள் கனவாக இருந்த கனரக வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் EuroMillions வெற்றியாளர் பெற்ற பரிசு பிரான்ஸில் இரண்டாவது மிகப்பெரிய தொகை என EuroMillions நிறுவனம் அறிவித்துள்ளது. வெற்றியாளருக்கு இந்த உலகத்தை காப்பாற்றுவதில் தீவிர ஆர்வம் உள்ளதாகவும், அதற்கான பணிகளில் தான் ஈடுபடவுள்ளதாகவும், முதல் கட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும் இந்த பணத்தின் ஒரு பகுதிகளை அவர் வழங்கிய தொண்டு நிறுவனம் பயன்படுத்தும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்கு கிடைக்கும் பணத்தை எல்லாம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு கொடுப்பதற்கே எதிர்பார்ப்பதாக அந்த நன்கொடையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.