ஆறு மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த நபர் கைது!
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதாக கூறி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரிடம் நபர் ஒருவர் 6,271,000 ரூபா பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மூவரால் கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
அதற்கமைவாக குறித்த சந்தேகநபர் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை(10.08.2023) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூலம் பாதிக்கப்பட்ட மூவர் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கேற்ப சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்அருக்கொட, அலுபொமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மூவரில் ஒருவரிடம் டொயோட்டா ஆக்சியோஸ் (Toyota Axio) ரக வாகனத்தை விடுவிப்பதாக கூறி 39 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாவும், மற்றொருவரிடம் அதேபோன்று இரண்டு வாகனங்களை விடுவிப்பதாக 10 இலட்சம் ரூபாவும் பெற்றுள்ளார்.
மேலும், குறித்த பெண்ணிடம் வேகன் ஆர் (Wagon R) வாகனத்தை விடுவிப்பதாக கூறி 13 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் புதுக்கடை, இலக்கம் 6 இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.