கோட்டாபய மக்களிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்...எதிர் கட்சிகள் வலியுறுத்தல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பை மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் லஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.]
ஒரு தேசத்திற்கு உணவு, உடை, உறைவிடம் அவசியம் என்பதை உறுதிப்படுத்துவது அரச தலைவரின் கடமையாகும். எனினும் இந்த விடயங்களில் ஜனாதிபதி தவறிவிட்டார். அதனால்தான் ஜனாதிபதி வீட்டுக்குச் சென்றுள்ளார் என கிரியெல்ல தெரிவித்தார். இதற்காக நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
19வது திருத்தத்தின் கீழ் அதிகாரங்கள் பாராளுமன்றம், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மாற்றப்பட்டன. இன்னும் 20வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி இந்த அதிகாரங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தையும் பறித்தார். இதுதான் இன்றைய பிரச்சனைக்கு காரணம்.
இதேவேளை, வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்க சார்பு செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்படுவதாகக் கூறி சட்ட மா அதிபருக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டங்களை முன்னெடுத்ததாக லச்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.