ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்து
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.