மின் வெட்டு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
நாட்டில் மின் வேட்டை அமுல்படுத்துவத இல்லையா என்பது தொடர்பில் இன்று மாலை முக்கிய தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான தீர்மானம் இன்றுடன் முடிவடைந்துள்ளதாகவும், இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். முன்னதாக, போதிய எரிபொருள் இல்லாத காரணத்தினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அண்மையில் தீர்மானிக்கப்பட்டதாகவும், இன்றைய தினத்தின் பின்னர் நிலைமையை மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
இருப்பினும் , பத்து நாட்களுக்குள் போதுமான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்டு நுவரெலியா நிலக்கரி அனல்மின் நிலையத்தை ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் செயற்படுத்தினால் எதிர்காலத்தில் மின்சாரம் தடைபட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரம் போதுமானதாக இல்லை என்றும், இதன் விளைவாக, நுகர்வோர் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டால், அவசரகால சூழ்நிலைகளிலும் தடையின்றி விநியோகத்தை உறுதிசெய்ய இது உதவும் என்றார்.