விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் தோற்கடிக்கப்படவில்லை
விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம்
புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது.
ஆனால், படையினருக்கு அமைத்தால் அதை இனவாதமாக காட்ட முற்படுகின்றனர். முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அடையாள அணிவகுப்பில் புலி உறுப்பினர் ஒருவரே சாட்சியமளித்துள்ளார்.
இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இப்படியான நிலைமையே இங்கு நிலவுகிறது. எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படையினரை நாம் காக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.