யாழ் தையிட்டி விவகாரம்; எம்பிக்கள் வெளிநடப்பு!
யாழ்.வலி,வடக்கு தையிட்டியில் மக்களின் காணியில் அடாத்தாக விகாரை கட்டியதற்கு எதிர்ப்பு தொிவித்தோரிடம் பொலிஸார் அடாவடி புரிந்ததை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.
வெளிநடப்பு செய்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்பு
இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , சி. சிறிதரன் , த. சித்தார்த்தன் , மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இவ்வாறு வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு - தையிட்டிக்குச் சென்று போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
1) யாழ் தையிட்டியில் பொலிஸார் குவிப்பு; போராட்டகாரர்களை பார்க்க சென்ற இருவர் கைது!
2) தையிட்டி விவகாரம் ; தடைகளை தாண்டி உள்ளே நுழைந்த சுமந்திரன் மற்றும் மாவை!(Photos)
3) யாழ்.வலி,வடக்கில் கெடுபிடிகள் அதிகரிப்பு; குவிக்கப்பட்ட இராணுவம்!