கறுப்பு பண கொடுக்கல் வாங்கல்களினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கறுப்பு பண கொடுக்கல் வாங்கல்களினால் நாட்டுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
200 கறுப்பு பண வர்த்தர்கள்
15 நாடுகளில் செயற்பட்டு வரும் சுமார் 200 கறுப்பு பண வர்த்தர்களினால் இலங்கையர்களுக்கு சொந்தமான வெளிநாட்டு நாணயங்கள் வங்கிகளில் வைப்பிலிடப்படுவதனை தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தந்த நாடுகளில் இந்த கறுப்பு பணம் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பயணம் அனுப்பி வைப்பது முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்டியல் முறையில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வே வாழ் இலங்கையர் ஒருவரினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு பெருந்தொகை சுவிஸ் பிராங்குகள் கிடைக்கப் பெற்றாலும், தற்பொழுது உண்டியல் வர்த்தகம் காரணமாக யாழ்ப்பாணத்தில் சுவிஸ் பிராங்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.