சின்னத்திரை ‘மெட்டி ஒலி’ பிரபலம் உயிரிழப்பு ; ரசிகரகள் பெரும் சோகம்
‘மெட்டி ஒலி’ தொடர் புகழ் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளமை சின்னத்திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘மெட்டி ஒலி’. 2002-2005 வரை மூன்று ஆண்டுகள் 811 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அப்போதைய சாதனைத் தொடராக இருந்தது.
திருமுருகன் இயக்கத்தில் உருவான இத்தொடரில் திருமுருகன், டெல்லி குமார், போஸ் வெங்கட், காவேரி, காயத்ரி, சஞ்சீவி, வனஜா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4-வது மகளாக நடித்தவர்தான் உமா மகேஸ்வரி.திருமுருகனுக்கு ஜோடியாக ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் உமாவின் நடிப்பும் இத்தொடரில் அதிகம் பேசப்பட்டது.

அதன்பின்னர், ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘உன்னை நினைத்து’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்தார். அதோடு மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவர் மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
உமா மகேஸ்வரியின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.