கிளிநொச்சியில் பலரையும் ஈர்த்த பொலிஸாரின் மனிதாபிமானம்!
கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று காணாமல் போனவர்களது விபரங்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
இத போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் ஓர் மூதாட்டி சுகயீனம் காரணமாக திடீரென நிலத்தில் சரிந்தார்.
அப்போது சுகவீனமுற்ற தாயாருக்கு அங்கு கடமையில் இருந்த சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
தாகத்தை தீர்த்த சிங்கள பெண் உத்தியோகஸ்தர்
உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சுகவீனமுற்ற தாயாருக்கு குடிநீர் வழங்கியுள்ளார். இந்நிலையில் சிங்கள பெண் உத்தொயோகஸ்தரின் மனிதாபிமானம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது விபரங்களை பதிவு செய்யும் அலுவலகமான ஓ.எம்.பி. அலுவலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன்று சனிக்கிழமை (08) காலை ஆரம்பமானபோது, அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அழைப்புக் கடிதங்கள் எரிப்பு
அத்துடன், அவர்கள் ஓ.எம்.பி. அலுவலகத்தினால் பதிவுகளுக்காக வழங்கப்பட்டிருந்த அழைப்புக் கடிதங்களையும் அலுவலகத்தின் முன்னால் வைத்து தீயிட்டு கொளுத்தி இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை யுத்தம் இடம்பெற்று தசாப்தம் கடந்தபோதிலும் , இலங்கைப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட தம் பிள்ளைகள், மற்றும் உறவுகளை தேடி இன்னும் எம்மக்கள் போராடி வரும் நிலையில், பலர் தங்கள் உறவுகளை காணாமலே உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.