உக்ரைனில் மனதை உருக்கும் சம்பவம்; ஒரு நாயின் காத்திருப்பு!
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது ஏஜமானர் அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீது சிறப்பு இராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் இராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்ட தன் எஜமானர் உடலின் அருகே நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் 1930 இல் ஐப்பானில் உயிரிழந்த தனது ஏஜமானருக்காக 9 ஆண்டுகள் காத்திருந்து உயிரிழந்த ஹசிகோ(Hasiko) நாயை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முன்னதாக, ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கும் போர் காரணமாக ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 இலட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள்.
இதுதவிர 60 இலட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் போரில் சுமார் 355 நாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.