புனிதமான தொழிலை அரசு புதினமாகத்தான் பார்க்கிறது
வாவியைக் கடப்பதற்கு பாதைப் போக்குவரத்திற்கு பணம் அறவிடுவதற்கு எதிராக ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்ட வேளையில் “புனிதமான தொழிலை அரசு புதினமாகத்தான் பார்க்கிறது“ என்று பளீரென குரல் எழுப்பிய ஆசிரியர் திரு.த.பேகராஜா அவர்கள் இன்றுடன் சேவை ஓய்வு பெறுகிறார்.
ஓய்வுபெற்றாலும் அவர் இளைஞர்தான் என்பதை அவரைத் தெரிந்தவர்கள் ஏற்பார்கள்.
அவரது சேவை ஓய்வினை நாங்கள் கொண்டாடவேண்டும் என அவரோடு தினமும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை பாதையில் மட்டக்களப்பு வாவியைக் கடக்கும் ஆசிரியர்கள் தீர்மானித்தபடி இந்த சிறிய நிகழ்வு “பாதைகாட்டிய” பாதையில் இடம்பெற்றது.
ஆசிரியர் அவர்களை அவரது பாடசாலைவரை பாதை நண்பர்கள் அழைத்துச் சென்று அவரது ஓய்வுகாலம் சிறப்பாக இளமையாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.