யாழ் வலிவடக்கு மக்களை ஏமாற்றிய அரசாங்கம்!
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தின் ஒருப்பகுதி நேற்று முன் தினம் விடுக்கப்பட்டிருந்தது .
இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு சிறுபகுதி நிலம் கூட பொதுமக்களின் நிலம் அல்ல என காணி உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி வாக்குறுதி
சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது அங்கு தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது , தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்களினுடைய நிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதாகவம், முகாம் அமைத்து வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.