ரணிலை பதிவிலிருந்து தூக்க கூடப்போகும் கூட்டம்!
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக வற்புறுத்தி நாளை தீவிர நடவடிக்கை எடுப்போம் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இன்று பிற்பகல் தெரிவித்தார்.
இன்று முதல் மக்களை அண்மித்த நகரங்களில் போராட்டங்களை நடத்த வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்த வசந்த முதலிகே, முழு நாட்டையும் போராட்டக்களமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அகற்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் போராட்டத்தை வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் வசந்த முதலிகே மேலும் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.