யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவருக்கு நேரந்த கதி
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான ஆணொருவர் தவறான முடிவெடுத்து இன்று உயிர் மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபர் போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் தனது சகோதரியிடம் போதைப்பொருளுக்கு பணத்தினை கேட்டுள்ளார்.
சகோதரி பணத்தைக் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டினுள் சென்ற நபர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.