பிரபல நீச்சல் வீரரை அழைத்த சிபிஐ!
பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் வர்த்தகர் ஜொனதன் மார்டின்டைன்ஸ் ஆகியோர் ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக இன்று சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்துக்கும், சீரற்ற நிதி நிர்வாகத்துக்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறுகோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் தாக்கல் செய்த மனுவும் உள்ளடங்கும்.
அம்மனுக்களிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த முன்னாள் அமைச்சர் பசில் உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.