கிளிநொச்சியில் குடும்பஸ்தரின் உயிரைப்பறித்த பாரவூர்தி!
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கண்டாவளை வெளிகண்டல் சந்திப்பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில்இடம்பெற்றுள்ளது.
வீதிகளில் நெல் உலர்த்தல்
புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து நெல் கொள்வனவுக்காக புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிகவிசாரனைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, கடந்து சில நாட்களிற்கு முன்னர் பரத்தன் பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரதான வீதிகளில் நெல் உலர்த்தப்படுவதால் வீதியால் பயணிப்போர் இவ்வாறான ஆபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
அந்நவகையில் இவ்வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.