கொலைச் சந்தேக நபரை காட்டிக்கொடுத்த நாய்!
வயல் தகராறு காரணமாக ஹசலக்க திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் தனது சகோதரனை அடித்துக் கொலை செய்த சந்தேக நபர் ஹசலக்க பொலிஸ் நாய் பிரிவை சேர்ந்த ஷாகி என்ற நாயின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஷாகியின் உதவியால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக திபுலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுப் பகுதியில் சடலம்
உயிரிழந்த நபர் கடந்த 4ஆம் திகதி வெவ்பிட்டிய பிரதேசத்துக்கு கால்நடைகளை மேய்க்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என திபுலபெலஸ்ஸ பொலிஸில் மனைவி முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது காணாமல் போனவரின் சடலம் காயங்களுடன் திகிபிட்டிய காட்டுப் பகுதியில் பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைச் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க ஹசலக்க பொலிஸாரின் ஷாகி என்ற பொலிஸ் நாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற நாய் சந்தேக நபரைக் காட்டிக் கொடுத்துள்ளது.
இதனையடுத்து 46 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை நீண்டகாலமாக நிலத்தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.