மருத்துவனையில் உயிருக்கு போராடிய தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்!
பிள்ளைகளின் திருமணத்தை தங்கள் உயிர் உள்ள போதே முடித்து வைத்துவிட வேண்டும் என்பதே அனைத்து பெற்றோரிடம் இன்றியமையாத ஆசையாக உள்ளது.
இந்த நிலையில் தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் பீகாரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் குமாரி இவர் மருத்துவமனை ஒன்றில் துணை செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின்னால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவருக்கு சாந்தினி என்ற 26 வயது மகள் ஒருவர் உள்ளார்.
சாந்தினிக்கும்,சேலம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுமித் கவுரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில், பூனம் குமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தனது மகளிடம் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் இது தான் தனது கடைசி ஆசை என்று வலியுறுத்தியுள்ளார்.
मरती मां की ख्वाहिश देख ICU में हुई बेटी की शादी #Bihar #ICU pic.twitter.com/vpxDbcJbnr
— Aman Kumar Dube (@Aman_Journo) December 26, 2022
இதை ஏற்று இரு குடும்பத்தினரும் சாந்தினி மற்றும் சுமித் கவுரவ் என்பவருக்கும் தனியார் மருத்துவமனையின் வாயில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின்னர், அந்த சாந்தினி தனது கணவருடன் திருமண கோலத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றார்.
இருவரையும் பார்த்த பூனம் குமாரி மகிழ்ச்சியுடன் இருவரையும் ஆசிர்வாதம் செய்துள்ளார். பின்னர் பூனாம் குமாரி உயிரிழந்தார். தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் சாந்தினி திருமண கோலத்தில் கதறி அழுதார்.