பிரபல தமிழ் தொழிலதிபர் கொலை வழக்கில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
பிரபல தொழிலதிபர் தினேஸ் ஷாஃப்டரின் படுகொலை குறித்த விசாரணைகள் தொடர்பில், நான்கு தொலைபேசிகளின் பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு பொரளை காவல்துறைக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தொலைபேசி பதிவுகள் அவசியம் என பொரளை காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாஃப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொரளை காவல்துறையினர் நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்டு தொலைபேசி பதிவுகளை பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.