குருநாகல் வனப்பகுதியில் உயிரிழந்த தம்பதியினர் தொடர்பில் வெளியான தகவல்
குருநாகல் பண்ணல - கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று காலை மீட்க்கப்பட்ட இரு சடலங்களும் தம்பதியினர் என தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இறப்பதற்கு முன்னர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் தற்காலிகமாக இவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 4 வயதில் பிள்ளையொன்றும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் உந்துருளியும்,கடிதம் மற்றும் நஞ்சு அடங்கிய போத்தல் என்பன காணப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.