நாட்டில் இது இல்லையென்றால் பேராபத்து ஏற்படும் அபாயம்
நாட்டில் முறையான முகாமைத்துவம் இல்லையெனில் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த கொரோனாவின் நிலைமை தற்போது குறைந்திருந்தாலும் மக்கள் அலட்சியமாக முறையான முகாமைத்துவத்தைக் செய்யாவிடில் தற்போதைய சூழல் மீண்டும் மோசமடையும் என சமித்த கினிகே எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியாளர்களின் சந்திப்பின்போதே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
நாட்டில் 53 சதவீத மக்கள் முழுமையான தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்.
63.6 சதவீத மக்கள் முதற்கட்ட தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
ஆனால் மக்களின் பாதுகாப்புக்கு இது மட்டும் போதாது. இந்த நிலையில் மீண்டும் மொறு அபாய நிலை ஏற்படாமல் இருக்க அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும்.
தடுப்பூசியைப் பெறுவது தனிமனித உரிமை தான் ஆனால் அதில் சமூக பொறுப்பும் உள்ளடங்கியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த நாடும் எந்த தடுப்பூசியையும் தடை செய்யவில்லை மாறாக தடுப்பூசியை பொறுத்து அவர்களது தனிமைப்படுத்தல் காலத்தை மற்றும் மாற்றியமைப்பர். ஆகையால் கிடைக்கும் தடுப்பூசியைப் மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். மீண்டும் ஒருமுறை அபாய நிலை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.