அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று (12.03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 98 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 47 சதம் விற்பனை பெறுமதி 374 ரூபாய் 51 சதமாவும் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 311 ரூபாய் 13 சதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 54 சதம் விற்பனை பெறுமதி 335 ரூபாய் 16 சதமாக பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 26 சதம், விற்பனை பெறுமதி 211 ரூபாய் 16 சதமாக பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபாய் 21 சதம், விற்பனை பெறுமதி 192 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 80 சதம் விற்பனை பெறுமதி 220 ரூபாய் 68 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 97 சதமாக பதிவாகியுள்ளது.