யாழ். மண்டைதீவில் இலங்கை இராணுவத்தின் கொடூரம் ; தாயின் நேரடி சாட்சியம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் யுத்த காலத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இராணுவத்தினரால் நடந்த கொடுமைகளை தாயொருவர் கதரி அழுந்து அவரது துயரத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரும் அவரது ஒரு ஆண் குழந்தை உட்பட 8 குழந்தைகளும் ஒரு பதுங்குக் குழியில் ஒளிந்திருந்த போது, இராணுவத்தினர் அந்த இடத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்து வெளியே சென்ற தனது மகனை இராணுவத்தினர் அலவாங்கால் தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
தனது கணவர் தனது ஒரே மகனை தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும் சப்பாத்து அணிந்த காலால் அவரை மிதித்து தள்ளியதாகவும் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், 3 துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்....