காதலனிடம் அடம்பிடித்த காதலி: திருமண தினத்தன்று விபரீத முடிவை எடுத்த மணமக்கள்!
இந்தியாவில் திருமண தினத்தன்று மணமகன் மற்றும் மணமகள் இருவரும் விஷம் அருந்திய சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இடம்பெற்றுள்ளது.
இந்தூர் பகுதியை சேர்ந்த 20 வயதான நிஷா என்ற பெண்ணும், 21 வயதான தீபக் என்ற ஆணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நிஷா தன் காதலன் தீபக்கை தன்னை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
அதற்கு தீபக், தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு 2 ஆண்டுகள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளார்.
அதனால், ஆத்திரமடைந்த நிஷா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து வேறு வழியின்றி இருவருக்கும் செவ்வாய்க்கிழமை கோயிலில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதனிடையே காதலர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் மன விரக்தியடைந்த தீபக் திருமண தினத்தன்று விஷம் அருந்தியுள்ளார்.
பின்னர் அதனை நிஷாவிடம் கூறிய போது அதிர்ச்சியடைந்த மணமகளும் விஷம் குடித்துள்ளார்.
இதையடுத்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் மணமகன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இதேசமயம் மணமகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.