செல்வத்தை குவிக்கும் பெஸ்ட் பரிகாரம், ஒரு கிண்ணத்தில் இதை போட்டு வைங்க.. பணப் பிரச்சினை தீரும்
வீட்டிலுள்ள நிதி நிலைமை சீராக வேண்டுமானால், குடும்பத்தில் ஒற்றுமை தழைக்க வேண்டுமானால், எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கல் உப்பு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால், வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டுவரக்கூடியது.. கல் உப்பு சகல செல்வங்களின் ஐஸ்வர்யமாக பார்க்கப்படுகிறது.
வீட்டில் உலாவும் தீய சக்தியை, எதிர்மறை ஆற்றல் விலக வேண்டுமானால், வீடு துடைக்கும்போது, அந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு துடைப்பது நல்லதாகும். சிவப்பு துணியில் கல் உப்பை கட்டி, முடிச்சு போல கட்டி வாசலில் தொங்கவிடலாம்... இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் நெருங்காது.
கல் உப்பு பரிகாரம்
அதேபோல வீட்டில் சண்டை சச்சரவுகள் அடிக்கடி நிலவுகிறது என்றால், வீட்டின் அறையிலுள்ள ஒரு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைக்கலாம். இதனால் பாசிடிவ் எனர்ஜி வீட்டில் அதிகரிக்கும்.. ஆனால், இந்த கல் உப்பினை மாதம் ஒருமுறை மாற்ற வேண்டும். இதனால் குடும்பத்தில் இணக்கமான போக்கு அதிகரிக்கும். அதேபோல, நிதி நெருக்கடிகள் நீங்க வேண்டுமானால், ஒரு கிண்ணத்தில் 3 கற்பூரம் 5 கிராம்புகளை நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள்ளாகவோ மாலை 6 மணிக்கு மேலாகவோ இந்த பரிகாரத்தை செய்துவரும்போது, நிதி நிலைமை சீராகும்.. அல்லது ஒரு கிண்ணத்தில் 5 கற்பூரம், 5 கிராம்பு, 5 ஏலக்காய் சேர்த்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை வீடு முழுக்க காட்டினால், எதிர்மறை ஆற்றல் வெளியேறி, நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும் என்பார்கள்.
வாசனை பொருட்கள் பரிகாரம்
சம்பளம் வாங்கியதுமே அதிலிருந்து ரூ.500 நோட்டை மட்டும் எடுத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் 5 ரூபாய் நாணயம், 1 ரூபாய் நாணயம் என 2 நாணயங்களையும் போட வேண்டும். இவைகளுடன் 2 ஏலக்காய், துண்டு பட்டை, 2 அண்ணாச்சி மொக்கு, கிராம்பு 3, குண்டு மஞ்சள் போன்றவைகளை சேர்க்க வேண்டும். இந்த வாசனை பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உள்ளன. கிண்ணத்திலுள்ள ரூபாய் நோட்டு மீது இவைகள் அனைத்தும் படர்ந்தும், திறந்தும் இருக்க வேண்டும்.
குபேரன் திசை - நிதி நிலைமை
இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலை அல்லது வடக்கு திசையில் வைத்துவிட வேண்டும். இது குபேரன் வாசம் செய்யும் திசையாகும்.. பூஜையறையில் பூஜை செய்யும்போதெல்லாம் இந்த கிண்ணத்திற்கும் தூபம் காட்ட வேண்டும். மாத கடைசியில் மீண்டும் 500 ரூபாய், 5 ரூபாய், 1 ரூபாய் நாணயத்தை வைத்து, வாசனைப் பொருட்களையும் அதனுடன் அப்படியே போட்டு வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது, வீட்டிலுள்ள பணக்கஷ்டம் மெல்ல தீர்ந்து நிதி நிலைமை சீராகும்.