பொலிஸார் அதிரடியில் விடுதியில் சிக்கிய அழகிகள்!
கொழும்பு - இரத்மலானையில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுர்வேத ஸ்பா
நான்கு சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் ஆண் முகாமையாளர் மற்றும் அதன் சேவைகளுக்கு உதவிய மூன்று பெண்களும் அடங்குவர்.
சந்தேகநபர்கள் வெலிமடையைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை மற்றும் பொல்பிட்டிஹிகமவைச் சேர்ந்த 19, 20 மற்றும் 26 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்