தலங்கம கொலை சம்பவம்; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற கணவன் மற்றும் மனைவி கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பகுதிகள் ஊடாகப் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை
நேற்று (13) மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டேஷ் கேமராக்களில், சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் EP KI-7738 இலக்கத்தைக் கொண்ட கார் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனவே, நேற்று மாலை இப்பகுதிகளில் பயணித்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தமது வாகனக் கெமராக்களைச் சோதித்து, குறித்த கார் தொடர்பான காட்சிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாகப் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அக்குரேகொட பகுதியிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், காரினுள் இருந்த தம்பதியினர் மீது மற்றுமொரு காரில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
மேல் மாகாண தெற்கு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர்: 071 8598008
பணிப்பாளர் / மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு: 071 8592279