தைத்திருநாளில் ஏற்ற வேண்டிய விளக்கு
வருடம் முழுவதும் நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெற வேண்டும் என்றுதான் பண்டிகைகளை மன நிறைவோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றோம்.
இதன் அடிப்படையில் தைப்பொங்கல் திருநாளான நாளைய தினம் நாம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த வழிபாடு உங்கள் வீட்டில் இருக்கும் செல்வ செழிப்பை உயர்த்த கூடியது. உங்கள் வீட்டில் இருக்கும் கடன் என்ற இருளை அகற்றக் கூடியது.
நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறுங்கள்.
தைப்பொங்கல் அன்று வீட்டில் ஏற்ற வேண்டிய விளக்கு தைப்பொங்கல் அன்று வீட்டில் கட்டாயமாக குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கில், 5 பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றவும்.
பெரும்பாலும் நம்முடைய வழிபாடுகளில் இரண்டு குத்து விளக்கு தான் ஏற்றுவார்கள்.
நீங்களும் இரண்டு குத்து விளக்குகளை ஏற்றி, பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.
இந்த குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதை, காலையில் பொங்கல் வழிபாடு செய்யும்போது செய்து விடவும்.
இது தவிர, தை 1ம் திகதி திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு வீட்டின் செல்வ செழிப்புக்காக ஒரு சிறப்பான பூஜை செய்யணும்.
அதற்கு ஒரு குத்து விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். அந்த குத்து விளக்கை சுற்றி மல்லி பூவால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
இன்றைய தினம் மல்லி பூவை காசு கொடுத்து வாங்குவது ரொம்ப ரொம்ப நல்லது.
மல்லி வாசம் மகாலட்சுமியை வசியம் செய்வது. 108 மல்லிகை பூ கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மல்லிகை பூவாக எடுத்து, இந்த குத்துவிளக்கின் மேல் போட்டு ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே வருக வருக’ என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியை வழிபாடு செய்யவும்.
அனைவருடைய மனதும் சந்தோஷமாக இருக்கக்கூடிய நல்ல நாள் இது.
இன்றைய நாள், குத்து விளக்குக்கு, மல்லிகைப் பூ அர்ச்சனை செய்வது உங்கள் குடும்பத்திற்கு நிறைவான சுபிட்சத்தை கொடுக்கும்.
அர்ச்சனை செய்து முடித்த இந்த மல்லிகை பூவை எடுத்து குப்பையில் போடக்கூடாது.
கவனம் வைத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் அப்படியே சேகரிக்கப்பட்டு ஒரு துணியின் மேல் பரப்பி விடுங்கள்.
வீட்டுக்குள்ளேயே நிழலிலேயே மல்லிகை பூக்கள் காயட்டும். காய்ந்த பிறகு அந்த பூக்களை உங்கள் வீட்டிற்கு உள்ளே மண்பாங்கான இடத்தில் போட்டு விடுங்கள்.
முடியாது என்பவர்கள் இதை சாம்பிராணி பொடியோடு சேர்த்து கலந்து வாரம் ஒரு முறை தூபம் போட பயன்படுத்தலாம்.