ரஷ்யா-உக்ரைன் போரால் பூனைகளுக்கு வந்த சோதனை
உக்ரைன் மீது நடத்தப்படும் போரை அடுத்து ரஷிய இன பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. இந்த போரானது கடந்த 8வது நாளாக நீடித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொருளாதார தடை உள்ளிட்ட பல உத்தரவுகள் ரஷியாவுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பூனைகளுக்கு உக்ரைனில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி சர்வதேச பூனை கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், உக்ரைன் குடியரசு மீது ரஷிய கூட்டமைப்பு ராணுவம் படையெடுப்பு நடத்தி, தொடங்கியுள்ள போரால் அதிர்ச்சி அடைந்தோம்.
இந்த போரால், ஒன்றுமறியாத பல மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் வீடுகளை விட்டு தங்களை காத்து கொள்ள வேறு இடங்களுக்கு தப்பியோடி உள்ளனர்.
இந்த போரால் ஏற்பட்டு உள்ள அழிவு மற்றும் குழப்பங்களை நாம் அனைவரும் காண்கிறோம் என தெரிவித்து உள்ளது.
இதன்படி இந்த வன்முறைகளை கண்டுகொண்டு பேசாமல் இருந்து விட முடியாது. அதனால், மார்ச் 1ந்திகதியில் இருந்து, ரஷியாவில் உள்ள பூனை இனங்கள் எதனையும் இறக்குமதி செய்யவோ மற்றும் ரஷியாவுக்கு வெளியே எங்களது அமைப்பில் பதிவு செய்யவோ முடியாது என தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த கட்டுப்பாடுகள் வருகிற மே 31ந்திகதி வரை அமலில் இருக்கும். தேவையானபோது, இந்த முடிவு மறுஆய்வு செய்யப்படும்.
உக்ரைனில் நடப்பு சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உள்ள பூனை இனங்களை பாதுகாக்க குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளது.