நாட்டின் பல இடங்களிலும் இன்று காலை பதற்ற நிலை!
நாட்டின் பல இடங்களிலும் இன்றுகாலை பல்வேறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பொது மக்கள் மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்ததனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதேவேளை புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால், கொழும்பு நகர சபை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.