யாழ் கோண்டாவில் பகுதியில் பதற்றம்
கோண்டாவில் அம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்று பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில், கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தி, வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியதுடன் வீட்டின் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.